அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மாலியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலரான மலாலா ஆகியோர் 2013ஆம் ஆண்டுக்கான “செல்வாக்கு மிகுந்த இளம் வயதினர்’ பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் டைம் பத்திரிகை செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் உலக அளவில் தங்கள் பணி மற்றும் சேவை மூலம் பிரமிக்கத்தக்க சாதனைகள் புரிந்த விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 16 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இளம் வயதினருக்கான திடத்துடன் நடந்துகொண்டதற்காக ஒபாமா மகள் மாலியும், தலிபான்களால் தாக்கப்பட்ட பிறகும் தைரியத்துடன் பெண் கல்விக்காக போராடிவருவதற்காக மலாலாவும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக “டைம்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேலும் இந்தப் பட்டியலில் பாப் பாடகர் ஜஸ்டின் பைபர், கோல்ஃப் விளையாட்டில் சாதனை புரிந்து வரும் லைடியா கோ, நீச்சல் வீராங்கனை மிஸ்ஸி பிராங்க்ளின் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.

obama_daughter_malala_001